2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

கிங்ஸ்11 பஞ்சாப் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியது

A.P.Mathan   / 2014 மே 08 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ், கிங்ஸ் 11 பஞ்சாப் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 44 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய கிங்ஸ் 11  பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது. கிளன் மக்ஸ்வெல் 38 பந்துகளில் 6 நான்கு ஓட்டங்கள், 8 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 90 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இந்த தொடரில் மக்ஸ்வெல் பெற்ற மூன்றாவது 90 ஒட்ட பெறுதி இதுவாகும். டேவிட் மில்லர் 32 பந்துகளில் 47 ஓட்டங்களையும், ஜோர்ஜ் பெய்லி 13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மோஹித் ஷர்மா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பப் டு பிலேசிஸ் 25 பந்துகளில் 52 ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மிச்சல் ஜோன்சன் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக கிளன் மக்ஸ்வெல் தெரிவானார்.

கிங்ஸ் 11 பஞ்சாப் அணி பெற்ற வெற்றியின் மூலம் இழந்த முதலிடத்தை மீண்டும் பெற்றுள்ளது. 7 போட்டிகளில் விளையாடி 6இல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் 6இல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .