Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 02 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 162 ஓட்டங்களுடன் மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டமிழந்தது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், அஹமதாபாத்தில் வியாழக்கிழமை (02) ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் றொஸ்டன் சேஸ் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், மொஹமட் சிராஜ் (4), ஜஸ்பிரிட் பும்ரா (3), குல்தீப் யாதவ் (2), வொஷிங்டன் சுந்தரிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களையே பெற்றது. ஜஸ்டின் கிறேவ்ஸ் 32, ஷாய் ஹோப் 26, சேஸ் 24 ஓட்டங்களைப் பெற்றனர்.
43 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
14 Apr 2026