2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

2ஆவது ஒருநாள்: இந்தியா முதலில் துடுப்பாட்டம்

George   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி டெல்லியில் ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவுடன் 5 ஒருநாள், 1இருபதுக்கு20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

கொச்சியில் 8ஆம் திகதி நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது

இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

2ஆவது ஒருநாள் போட்டியில் வெல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. அப்போதுதான் ஒருநாள் தொடரை வெல்வவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் மோகித் ஷர்மா காயம் காரணமாக விளையாடவில்லை, அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் களமிறங்குகிறார். மே.இந்திய தீவுகள் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .