2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஐ.பி.எல் முதற்ப் போட்டியில் கெவின் பீற்றர்சன் இல்லை

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லி டெயார் டெவில்ஸ் அணியின் முதற்ப்போட்டியில் அதன் அணித்தலைவர் கெவின் பீற்றர்சன் விளையாட மாட்டார் என அணி முகாமைத்துவம் அறிவித்துள்ளது. அவரின் கை விரலில் பயிற்சிகளின் போது ஏற்பட்ட காயமே இதற்க்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை அணியில் சேர்ப்பது தொடர்பில் யோசிப்பதற்கு இன்னும் பல நாட்கள் உள்ளன என கூறிய உதவிப் பயிற்றுவிப்பாளர் எரிக் சிம்மொன்ஸ் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவதும் சந்தேகம் என கூறினார். இதேவேளை கெவின் பீற்றர்சன் அணியில் இல்லாமல் போனது அணிக்கு பெரும் பின்னடைவு எனக் கூறிய அவர் எந்த அணியாக இருந்தாலும் அவரின் இழப்பு பெரியது என கூறினார்.

கெவின் பீற்றர்சனுக்கு பதிலாக டெல்லி டெயார் டெவில்ஸ் அணியின் உதவித் தலைவர் தினேஷ் கார்த்திக் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .