2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சென்னை அணிக்கு மேலும் இக்கட்டை ஏற்படுத்திய பிராவோ

Super User   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் இன் 7வது தொடரின் தொடக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மோசமாக அமைந்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிறந்த ஓட்டப்பிரதியான 205 ஓட்டங்களை எடுத்தும், தேல்வியை தழுவிக்கொண்டது .

இப்போட்டியில் மேக்ஸ்வெல் அடித்த பந்தை, பிடிப்பதற்கு முயன்ற சகலதுறை ஆட்டக்காரரான பிராவோ பாய்ந்து பிடிக்க முயன்ற சமயம இடது தோளில் காயம் அடைந்தார்.

உடனடியாக களத்தில் இருந்து வெளியேறிய இவர், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுவரையிலும் காயம் குறித்து முழுமையாக தெரியவரவில்லை, எவ்வாறாயினும் இது சென்னை அணிக்கு பாரிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற தொடரில் அதிக இலக்குகளை (32) வீழ்த்திய வீரர் என்ற பெருமை பெற்ற இவர், பஞ்சாப் அணிக்கு எதிராக பந்து வீசாததும், சென்னை அணிக்கு பின்னடைய வைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .