A.P.Mathan / 2014 மே 08 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஒன்றை நவம்பர் மாதம் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செய்துள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை ட்வென்டி ட்வென்டி போட்டி என்பன இந்த தொடரில் விளையாடப்படவுள்ளன. நியூசிலாந்து கிரிக்கெட் அணி கடந்த 10 வருடங்களாக பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டதில்லை. இறுதியாக பாகிஸ்தானுக்கு 2004ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்று விளையாடி இருந்த்தது. இந்த நிலையில் தற்போது இந்த கிரிக்கெட் தொடர் ஏற்ப்பாடு செய்து இருந்தாலும் பாகிஸ்தானில் நடைபெறவில்லை. பாகிஸ்தான் அணி தனக்கான தொடர்களை ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திலேயே நடாத்தி வருகின்றது. 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து எந்த அணியும் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago