2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கால்பந்து உலகக் கிண்ண பிரேசில் அணி

A.P.Mathan   / 2014 மே 08 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்தாட்ட உலக கிண்ணத்திற்கான பிரேசில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 23 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இம்மாதம் 16ஆம் திகதிக்கு பின்னரே உத்தியோகபூர்வமாக அணிகளை அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் முகாமையாளர் லூயிஸ் பிலிப்பே ஸ்கொலாரி இந்த அணியை தெரிவு செய்துள்ளார். இந்த அணி சிறப்பாக செயற்படும் என்ற அடிப்படையில் தெரிவு செய்துள்ளார். பிரேசிலின் அனுபவம் வாய்ந்த நல்ல தரமான மூன்று வீரர்கள் இந்த அணியில் இடம்பெறவில்லை. பிரேசில் நாட்டிற்காக 97 போட்டிகளில் விளையாடிய நட்சத்திர வீரர் ரொனால்டினோ, 92 போட்டிகளில் விளையாடிய ரொபினோ, 87 போட்டிகளில் விளையாடிய கக்கா ஆகியோர் இந்த அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. இவர்கள் மூவரும் 30 பேர் கொண்ட குழுவில் இடம் பிடித்து இருந்த போதும் இறுதி அணியில் இடம் பிடிக்கவில்லை.

இதேவேளை 22 வயதான பிரேசில் மற்றும் பார்சிலோனா கழகத்தினது சுப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நேய்மர், அணியில் இணைக்கப்பட்டுள்ளார். தன்னுடைய சிறிய வயது கனவு நனவாகியுள்ளதாக அவர் தன் சந்தோசத்தை வெளியிட்டுள்ளார். உலக கிண்ண தொடரில் விளையாட வேண்டும் எனபதே அவர் கனவு.

அணி விபரம்
கோல் காப்பாளர்கள் - ஜூலியோ சீசர், ஜெபர்சன், விக்டர்
தடுப்பு வரிசை - டன்டி, டேவிட் லூயிஸ், ஹென்றிக்கே, தியாகோ சில்வா, டானியல் அல்வெஸ், மைக்கொன், மார்செலோ, மக்ஸ்வெல்
மத்திய வரிசை - பெர்நான்டினோ, ஹேர்நன்ஸ், லூயிஸ் கஸ்டோவா, ஒஸ்கார், போலினோ,ரமிரெஸ், வில்லியன்
முன் வரிசை - பேர்னாட், பிரெட், ஹல்க், ஜோ, நேய்மர் 

பிரேசிலே கால்பந்தாட்டத்தின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்து வருகின்றது. இதுவரை 5 தடவைகள் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ள பிரேசில் இம்முறை தங்கள் நாட்டில் நடைபெறுவதனால் அதிகம் வெற்றி பெறும் வாய்ப்புகளுடன் காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .