2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

ஹைதராபாத் அணிக்கு வெற்றி

A.P.Mathan   / 2014 மே 09 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் ராஜஸ்தான் ரோயல்ஸ், ஹைதராபாத் சன் ரைசேர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் சன் ரைசேர்ஸ் அணி 32 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பாடிய ஹைதராபாத் சன் ரைசேர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை  இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. இதில் இதில் சிகார் தவான் 20 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 33 ஓட்டங்களையும், இர்பான் பதான் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரஜாட் பாத்தியா, ஷேன் வொட்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைபற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஸ்டீபன் ஸ்மித் 22 ஓட்டங்களையும், சஞ்சு சம்சன் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஹைதராபாத் சன் ரைசேர்ஸ் அணி சார்பாக   புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்களையும், டேல் ஸ்டைன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக புவனேஸ்வர் குமார் தெரிவானார்.  புவனேஸ்வர் குமார் கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர் வரிசையில் தற்போது முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவர் 14 விக்கெட்களைக் இதுவரை கைபப்ற்றியுளார். முதலிடத்தில் இருந்த மோஹித் ஷர்மாவும் 14 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இருப்பினும் புவனேஸ்வர் குமார் 7 போட்டிகளில் கைப்பற்றியுள்ளமையினால் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் சன் ரைசேர்ஸ் அணி 6 புள்ளிகளைப் பெற்று ஆறாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தொடர்ந்தும்  10 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலுள்ளது. ஆறாமிடத்திலிருந்த  மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது ஏழாமிடத்தைப்  பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .