2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது டெல்லி டெயார் டெவில்ஸ்

A.P.Mathan   / 2014 மே 16 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் ரோயல்ஸ், டெல்லி டெயார் டெவில்ஸ் அணிகளுக்கிடையிலான ஐ.பி.எல் போட்டித் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 62 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் டெல்லி டெயார் டெவில்ஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. 
 
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஜின்கையா ரெஹானே 64 ஓட்டங்களையும் சஞ்சு சம்சன் 40 ஓட்டங்களையும், கெவென் கூப்பர் 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சபாஷ் நதீம், இம்ரான் தாகிர் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். 
 
பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மனோஜ் திவாரி 61 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ராஜாட் பாத்தியா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக அஜின்கையா ரெஹானே தெரிவானார். 
 
இந்த வெற்றியின் மூலம் தாங்கள் விளையாடிய 11 போட்டிகளில் 7இல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி. இந்த தோல்வியின் மூலம் 11 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளுடன் உள்ள டெல்லி டெயார் டெவில்ஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .