2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயார்: வில்லியர்ஸ்

A.P.Mathan   / 2014 மே 16 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்கா அணியின் டெஸ்ட் அணியின் தலைமை பொறுப்பை ஏற்க தயார் என AB DE வில்லியர்ஸ், இணையத்தளம் ஒன்றிக்கான நேர்காணலில் தெரிவித்துள்ளார். தான் டெஸ்ட் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதாக இருந்தால் விக்கெட் காப்பில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். விக்கெட் காப்பளராக கடமையாற்றிய படி தலைமைப் பொறுப்பை செய்வது கடினம் எனவும் அதிக அழுத்தங்களை சந்திக்க வேண்டி வரும் எனவும், தன்னால் சரியான முறையில் எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முடியாமல்ப் போகும் எனக் கூறியுள்ளார்.

10 வருடங்களுக்கு மேலாக தென் ஆபிரிக்க அணியின் தலைவராக கடைமையாற்றிய கிரேம் ஸ்மித், அண்மையில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து தலைமைப் பதவி வெற்றிடமாக உள்ளது. AB DE வில்லியர்ஸ் ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் தலைமைப் பதவிக்கு 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடருக்கு பின்னர்  நியமிக்கப்பட்டார். டுவென்டி டுவென்டி போட்டிகளின் தலைவராகவும் வில்லியர்ஸ் கடமையாற்றிய போதும் சுமைகளையும் அழுத்தங்களையும் குறைக்கும் நோக்கில் அந்த பதவியில் இருந்து விலகினார்.

இலங்கை அணியுடனான தொடருக்கு டெஸ்ட் போட்டிகளுக்கு அணித் தலைவர் நியமிக்கப்படவேண்டும். அதேவேளை ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளரும் தேவை என்ற நிலை  உள்ளது. இதன் படி குயின்டன் டி கொக் அணியில் சேர்க்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ள போதும் தமி சோலக்கிலே இக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. 

AB DE வில்லியர்ஸ் அணித்தலைமைப் பொறுப்பு அனுபவம் எதுவுமற்றவர். பாடசாலையிலோ கழகங்களிலோ தலைவராக இருந்ததில்லை. இருப்பினும் டுவென்டி டுவென்டி அணித் தலைமைப் பொறுப்பு, ஒருநாள் சர்வதேசப் போட்டி தலைமைப் பொறுப்பு என்பன தனக்கு நல்ல அனுபவத்தை தந்ததாகவும் அவற்றில் கற்றுக் கொண்டதை தான் டெஸ்ட் போட்டிகளில் பாவிக்க முடியும் எனவும் வில்லியர்ஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .