A.P.Mathan / 2014 மே 20 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் அணிக்கும், ஹதராபாத் சன் ரைசேர்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய ஹதராபாத் சன்ரைசேர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 142 ஒட்டங்களைப் பெற்றது. இதில் டேவிட் வோர்னர் 34 ஓட்டங்களையும், இர்பான் பதான் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரொபின் ஊத்தப்பா 40 ஓட்டங்களையும், யூசுப் பதான் ஆட்டமிழக்காமல் 39 ஒட்டங்க,ளையும், மானிஷ் பாண்டி 35 ஓட்டங்களையும், பெற்றனர். போட்டியின் நாயகனாக உமேஷ் யாதவ் தெரிவு செய்யப்பட்டார். 2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago