2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

சென்னையை வீழ்த்தியது பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ்

A.P.Mathan   / 2014 மே 20 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூபப்ர் கிங்ஸ் அணிக்கும், பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும், டேவிட் ஹசி 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வருண் ஆரோன் 2 விக்கெட்களைக்  கைப்பற்றிக் கொண்டார்.

பதிலுக்கு துடுப்பாடிய பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது. இதில் க்றிஸ் கெயில் 46 ஓட்டங்களையும், வில்லியர்ஸ் 28 ஓட்டங்களையும், விராத் கோலி 27 ஓட்டங்களையும் பெற்றனர். அஷ்வின், டேவிட் ஹசி ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக வில்லியர்ஸ் தெரிவானார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 8 வெற்றிகளைப் பெற்று 16 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலுள்ளது. பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி 11 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தைப் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .