2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்து அணித் தலைவர் இலங்கை மீது பாய்ச்சல் ; மஹேல பதிலடி

Super User   / 2014 ஜூன் 04 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துஇ இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஐந்தாவதும்  இறுதியுமான போட்டியில் சசித்திர சேனநாயக்க ஜோஸ் பட்லரினை ரன் அவுட் முறையில்  ஆட்டமிழக்க செய்தது  சர்ச்சைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. போட்டி நிறைவடைந்ததும் இலங்கை அணி தவறாக நடந்துள்ளது.

கனவான் தன்மையை மீறி நடந்துள்ளது. வரையறைகளை மீறி விட்டது. மிகவும் கீழ்த் தரமான செயல். இனி மேல் இவ்வாறு நடக்காமல் பாத்துக்கொள்ள வேண்டும் என கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை இங்கிலாந்து அணித் தலைவர் அலஸ்டயர் குக் வெளியிட்டுள்ளார்.

இதே போன்ற சம்பவங்களை நான் இதற்க்கு முன்னர் பாத்ததில்லை. இங்கிலாந்து அணித் தலைவராக எப்போதும் கிரிக்கெட்டின் கனவான் தன்மையை பாதுகாக்கவே நான் செயற்படுவேன் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது அணியை எவ்வாறு செயற்ப் படுத்த வேண்டும் என தலைவர் தெரிந்து கொள்ள வேண்டும் என அஞ்சலோ மத்தியூஸ் மீதும் தனது அதிருப்தியை குக் வெளியிட்டுள்ளார்.

நேற்று நடை பெற்ற போட்டியில் சசித்திர சேனநாயக்க பந்து வீசும் போது பந்து வீச்சு முனையில் இருந்த ஜோஸ் பட்லர் பந்து வீசுவதற்கு முன்னரே எல்லைக் கோட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். விதிகளின் படி அவ்வாறு செல்ல முடியாது. எனவே சசித்திர சேனநாயக்க அவரை ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க செய்தார்.

நடுவர்கள் இலங்கை அணித் தலைவரிடம் இந்த ஆட்டமிழப்பை விரும்பினால் கனவான் தன்மையை கருத்திற் கொண்டு பின் வாங்குமாறு கோரினார்.

இருப்பினும் அஞ்சலோ மத்தியூஸ் அதற்க்கு சம்மதிக்கவில்லை. ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்து தொடரையும் இழந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணித் தலைவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதே போன்ற ஆட்டமிழப்பு சம்பவம் 1992 ஆம் ஆண்டு நடந்து இருந்தது. அதற்கு பினன்ரும் சில தடவைகள் நடந்த போதும் அவை குறித்த அணிகளின் தலைவர்களினால் பின் வாங்கப்பட்டன.


இங்கிலாந்து அணித் தலைவரின் கருத்துகளின் பின்னர் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரான மஹேல ஜெயவர்த்தன இலங்கை அணியின் நியாயங்களை இ இங்கிலாந்து அணித் தலைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளார்.

விதிமுறைகளை தொடர்ந்து மீறி நடந்தால் நாம் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறன நடவடிக்கைகளில் தான் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார். நாங்கள் எந்த இடத்திலும் கனவான் தன்மையை மீறி நடக்கவில்லை. இரண்டு தடவைகள் நடுவர்கள் மூலம் எச்சரிக்கை வழங்கியும் ஜோஸ் பட்லர் தொடர்ந்தும் பந்து வீச முன்னர் எல்லைக் கோட்டை தாண்டி சென்ற வண்ணம் இருந்தார். அதன் பின்னரே நாங்கள் இதை செய்தோம் என கூறிய மஹேல ஜெயவர்தன நான்காவது போட்டியினை ஒளிப்பதிவில் பார்த்த போது ஜோஸ் பட்லர்இ ரவி போபரா ஆகியோர் இறுதி 12 ஓவர்களில்  22 இரட்டை ஓட்டங்களை இதன் மூலம் பெற்றுள்ளமையை பார்த்தோம்.

இந்த போட்டியிலும் நடுவர்களுக்கும்இ ஜோஸ் பட்லருக்கும் எச்சரிக்கை செய்தும் அவர்கள் கணக்கில் எடுக்கவில்லை. அதன் பின்னரே அவரை ஆட்டமிழக்க செய்தோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் கனவான் தன்மையுடன் விளையாடும் போது எதிரணி கனவான் தன்மையை மீறி இ விதிமுறைகளையும் மீறி நடந்தால் நாங்கள் விதியை கையில் எடுப்பதை தவிர வேறு வழியில்லை. மற்ற அணி விதிகளை மீறி விளையாடுகின்றது என்றால் அவர்கள் கிரிக்கெட்டின் கனவான் தன்மையுடன் விளையாடவில்லை என்பது அர்த்தம். அந்த நேரத்தில் நாங்கள் என்ன செய்வது என்ற கேள்வியையும் மஹேல ஜெயவர்தன கேட்டுள்ளார்.

கடந்த வருட சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்பட்ட கனவான் தன்மையுடன் கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற விருதினை இலங்கை அணி சார்பாக மஹேல ஜெயவர்தன பெற்றுக் கொண்ட அதேவேளை சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்பட்ட கிரிக்கெட்டினை கனவான் தன்மையுடன் விளையாடும் அணிக்கான விருதினை இரண்டு  தடவைகள்  இலங்கை அணி 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த விருதினை இங்கிலாந்து அணி 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் பெற்று இருந்தது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .