2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

பிரெஞ்சு இறுதிப் போட்டியில் சரப்போவா, சிமோனா

Menaka Mookandi   / 2014 ஜூன் 06 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் பிரிவில் மரியா சரப்போவா, சிமோனா ஹலெப் ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.

ரஷ்சிய வீராங்கனை மரியா சரப்போவா, கனடாவின் வீராங்கனை ஜூஜீன் பௌச்சார்ட் உடன் மோதி 4இற்கு 6 என்ற புள்ளிகளின் படி முதல் செட்டில் தோல்வியடைந்த போதும் அடுத்த இரண்டு சுற்றுக்களிலும் 7இற்கு 5,  6 இற்கு 2 என்ற புள்ளிகளின் படி வெற்றி பெற்றார்.

மற்றைய அரை இறுதிப் போட்டியில் ரொமேனியா வீராங்கனை சிமோனா ஹலெப், ஜெர்மனி வீராங்கனை அன்றியா பெட்கோவிக்கை 6இற்கு 2 , 7இற்கு 6 என்ற புள்ளிகளின் படி இரண்டு செட்களிலும் வெற்றி பெற்றார்.

ஆண்களுக்கான தொடரின் அரை இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .