2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

நெதர்லாந்து, கொஸ்டரிக்கா அணிகள் காலிறுதிப் போட்டியில்

A.P.Mathan   / 2014 ஜூன் 30 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிகளுக்கு நெதர்லாந்து, கொஸ்டரிக்கா அணிகள் தெரிவாகியுள்ளன. நேற்று இடம்பெற்ற இரண்டாம் சுற்றின் முதற்ப் போட்டியில் நெதர்லாந்து அணி, மெக்சிகோ அணியை 2 இற்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜிஜோவ்னி டொஸ் சன்டோஸ் முதல் கோலை மெக்சிகோ அணி சார்பகா அடித்தார். 69ஆவது நிமிடத்தில் வெஸ்லி ஸ்னைடர் நெதர்லாந்து அணிக்காக கோலை அடித்து போட்டியை சமன் செய்தார். 90ஆவது நிமிடத்தில் பனால்டி உதை மூலம் க்ளாஸ் ஜான் ஹண்டெலார் அடித்த கோல் மூலம் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. மெக்சிகோ கோல் காப்பாளர் கிலர்மோர் ஓசோ போட்டியின் நாயகனாக தெரிவானார். 
 
கொஸ்டரிக்கா, கிரீஸ் அணிகளுக்கிடையிலான போட்டி தலா ஒவ்வொரு கோல்களுடன் சமநிலையில் நிறைவடைந்தது. பின்னர் முடிவை தீர்மானிக்கும் பனால்டி உதை மூலம் 5 இற்கு 3 என்ற கோல் கணக்கில் கொஸ்டரிக்கா அணி வெற்றி பெற்று முதற் தடவையாக காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. ப்ரையன் ரூயிஸ் 52ஆவது நிமிடத்தில் கொஸ்டரிக்கா அணிக்காக முதல் கோலை அடித்தார். 90ஆவது நிமிடத்தில் ஷோகிரடிஸ் பபஷ்டதொப்லஸ் அடித்த கோல் மூலம் போட்டி சமநிலை அடைந்தது. மேலதிக நேரத்தில் இரண்டு அணிகளாலும் கோல்கள் எதனையும் பெற முடியவில்லை. கொஸ்டரிக்கா கோல் காப்பாளர் கெய்லர் நவாஸ் போட்டியின் நாயகனாக தெரிவானார். 
 
இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நெதர்லாந்து, கொஸ்டரிக்கா அணிகள் காலிறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .