2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

மே.இ.தீவுகளுக்குப் பதிலாக இலங்கை

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 17 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியத் தொடரை பாதியிலேயே கைவிட்டதையடுத்து இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக விளையாட ஒப்புதல் தெரிவித்துள்ளது.
 
இலங்கை கிரிக்கெட் வாரியச் செயலர் நிஷாந்தா ரணதுங்க இது குறித்துக் கூறும்போது, “கொள்கை அளவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது. 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறோம்.
 
டுவென்டி 20 கிரிக்கெட்டிலும் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது. ஆனால், உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறோம்” என்றார். 
 
நவம்பர் 1 முதல் 15ஆம் திகதிக்குள் இந்தத் தொடர் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ பயணத் திகதி விவரங்களை இறுதி செய்த பிறகே இது குறித்து தெரியவரும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .