2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல். போட்டியில் விளையாட மேற்கிந்திய தீவுகள் வீரர்களுக்கு தடை?

George   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல். போட்டியில் விளையாட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு தடை விதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய சுற்றுப்பயணத்தை பாதியில் இரத்து செய்ததையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஐ.பி.எல்.போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் சூழ்நிலை எழுந்துள்ளது.

இது தொடர்பில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

8ஆவது ஐ.பி.எல். போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் பங்கேற்பது குறித்து ஐ.பி.எல். நிர்வாக குழுவில் விவாதிக்கப்படும். குறைந்தபட்சம் ஒரு தொடரிலாவது அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கிரிக்கெட் சபையின் உறுப்பினர்களில் சிலர் விரும்புகின்றனர்.

கிறிஸ் கெய்ல், பொலார்ட், பிராவோ போன்ற மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் ஐ.பி.எல். போட்டி மூலம் தான் அதிக பணம் உழைக்கின்றனர் இந்தியா மூலம் தான் அவர்கள் புகழின் உச்சத்துக்கு சென்றனர்.

இந்திய இரசிகர்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு அதிகமானது. அப்படி இருக்கையில் அவர்கள் முதுகில் குத்துவிட்டனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்பு கொச்சியில் கிரிக்கெட் சபை செயலாளர் சஞ்சய் பட்டேலிடம் உத்தரவாதம் அளித்து இருந்தனர். தற்போது அதில் இருந்து பின்வாங்கிவிட்டனர் என்றார்.

இதேவேளை, வியாபார நோக்கத்துக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கும்போது, நாம் ஏன் அவர்களுக்கு தடை விதிக்கக்கூடாது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .