2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

வீனஸ் சகோதரிகளை கேலி செய்த ரஷ்ய டென்னிஸ் தலைவருக்கு தடை

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா டென்னிஸ் நட்சத்திரங்களான வீனஸ் சகோதரிகளை "வீனஸ் பிறதேர்ஸ்" என அழைத்த ரஷ்யா டென்னிஸ் சம்மேளன தலைவருக்கு உலக டென்னிஸ் சம்மேளனம் 25,000 அமெரிக்க டொலர்களை தண்டமாக அறவிட்டுள்ளதுடன் ஒரு வருடத்திற்கு டென்னிஸ் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதவாறு தடைசெய்துள்ளது. நகைச்சுவையாக ரஷ்ய டென்னிஸ் சம்மேளன தலைவர் ஷமில் டர்பிசெவ், வில்லியம்ஸ் சகோதரிகளை வில்லியம்ஸ் சகோதரர்கள் என அழைத்தமையானது பாலியல் மற்றும் இன ரீதியில் பாவிக்கப்பட்ட வார்த்தைகள் என செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளதுடன் டென்னிஸ் சம்மேளனம் உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு தனது நன்றிகளை கூறியுள்ளார். ஷமில் டர்பிசெவ் மிகச்சிறந்த அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர். நிர்வாக திறன் கொண்டவர். அவரிடமிருந்து இவ்வாறான கருத்துகள் அதிருப்தியை தந்ததுடன் கவலையளித்தது என செரீனா மேலும் தெரிவித்துள்ளார். 
 
அவர் கூறியுள்ள விடயங்கள் அர்த்தமற்றவை. அத்துடன் இந்த விளையாட்டில் அவ்வாறன கருத்துகளுக்கு இடம் இல்லை எனவும் உலக டென்னிஸ் சம்மேளன தலைவர் ஸ்டேசி அலஸ்டர் தெரிவித்துள்ளார். 
 
குறித்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள ரஷ்ய டென்னிஸ் சம்மேளன தலைவர் ஷமில் டர்பிசெவ், தான் நகைச்சுவையாகவே குறித்த கருத்துகளை கூறியதாகவும் எந்த உள் நோக்கமும் அதனுள் இருக்கவில்லை எனவும் கூறியுள்ளார். ரஷ்யாவின் இரண்டாம் நிலை வீராங்கனை மரியா சரபோவா, குறித்த கருத்துகளுக்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் கூறியுள்ள கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு எதிராக டென்னிஸ் சம்மேளனம் உட்பட அனைவரும் எதிராக நிற்கின்றனர். அவரின் பதவிக்கும் பொறுப்புக்கும், குறித்த கருத்துகள் ஏற்புடையவை அல்ல என சரபோவா மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .