2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சானியா மிர்ஸா ஜோடி வெற்றி

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 26 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஜோடி, சிங்கப்பூரில் நடைபெற்ற மார்டினா நவ்ரடிலோவா கிண்ணத்தை புதிய சாதனையுடன் வெற்றி பெற்றுள்ளது. சானியா மிர்ஷா, சிம்பாவே நாட்டின் கரா ப்ளக் உடன் இணைந்து விளையாடி வெற்றி பெற்றார். 
 
இந்த தொடரில் சானியா மிர்ஸா இம்முறையே முதற்தடவையாக கலந்து கொண்டு இருந்தார். இறுதிப் போட்டியில் மிர்ஸா, ப்ளக் ஜோடி 6 இற்கு 1, 6 இற்கு 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. 
 
மகளிர் இரட்டையர் போட்டிகளில் இறுதிப் போட்டியில் பெறப்பட்ட மிகப் பெரிய வெற்றி இதுவாகும். 
 
சானியா மிர்ஸா முதற் தடவையாக இந்த தொடரில் பங்குபற்றி வெற்றி பெற்றுள்ள அதேவேளை கரா ப்ளக் ஏற்கெனவே இரண்டு தடவைகள் வேறு ஜோடியுடன் இணைந்து வெற்றி பெற்றுள்ளார். நடப்பு சம்பியன் ஜோடியான ஹெயிஸ் சு வேய் மற்றும் பெங் ஷுஐ ஜோடியை வென்றே மிர்ஸா, ப்ளக் ஜோடி சம்பியன் ஆகியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .