George /
2014 நவம்பர் 02 , மு.ப. 09:22 - 0
- {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆதிக்கம் தொடர்கின்றது. வெற்றி பெறக்கூடிய பலமான நிலையைப் பெற்றுள்ளது. 370 ஓட்டங்கள் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.
மூன்றாவது நாள் நிறைவில் சிறந்த பந்துவீச்சு மூலம் அவுஸ்திரேலிய அணியின் சகல விக்கெட்களையும் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. தமது இரண்டாம் இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்களை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஆஷர் அலி 21 ஓட்டங்களையும், யூனுஸ் கான் 16 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாடி வருகின்றனர். மிச்சல் ஜோன்சன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அவுஸ்திரேலிய அணி தமது முதல் இன்னிங்க்சில் சகல விக்கெட்களையும் இழந்து 261 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மிச்சல் மார்ஷ் 87 ஓட்டங்களையும், மைக்கல் கிளார்க் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இம்ரான் கான் 3 விக்கெட்களையும், சுல்பிகர் பாபர், ரகாத் அலி, யசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 570 ஓட்டங்களைப் பெற்று தமது முதல் இன்னிங்சை நிறைவு செய்தது. யூனுஸ் கான் 213 ஓட்டங்களையும், மிஸ்பா உல் ஹக் 101 ஓட்டங்களையும், ஆசார் அலி 109 ஓட்டங்களையும் பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 570 ஓட்டங்களைப் பெற்று தமது முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.
யூனுஸ் கான் பெற்றுள்ளது 27 வது சதமாகும். ஏற்க்கனவே கடந்த போட்டியில் அடித்த சதங்கள் மூலமாக பாகிஸ்தான் சார்பாக கூடுதலான சதங்களை அடித்தவர் என்ற சாதனையை தனதாக்கினார். கூடுதலான சதங்களை அடித்தவர் பட்டியலில் 13ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மிஸ்பா உல் ஹக் 40 வயதும் 156 நாட்களும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அடித்துள்ள சதம் அண்மைக்காலத்தில் வயது கூடியவர் ஒருவரால் அடிக்கபப்ட்ட சதம் என குறிப்பிடலாம்.
இந்த வருடம் சிவ்நரையன் சந்தர்போல் 40 வயதும் 28 நாட்களும் பூர்த்தியாகிய நிலையில் சதம் அடித்து இருந்தார். அதற்க்கு முன்னர் 1991 ஆம் ஆண்டு க்ரஹாம் கூச் 40 வயதும் 314 நாட்களும் பூர்த்தியான நிலையில் சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.