A.P.Mathan / 2014 நவம்பர் 04 , மு.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 2 போட்டிகள் அடங்கிய தொடரை 2 இற்கு 0 என வெற்றி பெற்றுக்கொண்டது. 20 வருடங்களுக்கு பின்னர் அவுஸ்திரேலியா அணியை பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியே பாகிஸ்தான் அணி ஓட்டங்களினால் பெற்ற பெரிய வெற்றி ஆகும். அதேவேளை இந்த தொடரில் பாகிஸ்தான் அணி சார்பாக 9 சதங்கள் பெறப்பட்டன. இது புதிய சாதனையாக அமைந்துள்ளது. 2 போட்டிகள் அடங்கிய தொடரில் இதுவரை 6 சதங்கள் பெற்றதே சாதனையாக இருந்தது. இதேவேளை பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் இரண்டாம் இன்னிங்சில் 56 பந்துகளில் சதம் அடித்து வேகமான டெஸ்ட் சதம் என்ற சாதனையை சமப்படுத்தினார். இதற்க்கு முன்னர் மேற்கிந்திய தீவுகளின் சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்த சாதனையை தன் வசம் வைத்து இருந்தார். இந்த தொடர் வெற்றி மூலம் ஏழாமிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 4 இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago