A.P.Mathan / 2015 ஜனவரி 20 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கிடையில் பிரிஸ்பேனில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இந்திய அணி படுதோல்வியடைந்துள்ளது. குறித்த போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 135 பந்துகள் மீதமிருக்க 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, போனஸ் புள்ளியுடன் 5 புள்ளிகளை தனதாக்கிக்கொண்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியதோடு 6 வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
39.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. இந்திய அணியில் ஸ்டுவர்ட் பின்னி, அதிகப்பட்சமாக 44 ஓட்டங்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பில் ஸ்டீவன் ஃபின் 5 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் அட்டர்ஸன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இலகுவான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 27.3 ஓவர்களில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இங்கிலாந்து அணியின் இயன் பெல் 88 ஓட்டங்களையும் ஜேம்ஸ் டெய்லர் 56 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.
வீழ்ந்த ஒரு விக்கெட்டினை ஸ்டுவர்ட் பின்னி பெற்றுக்கொண்டார்.
போட்டியின் நாயகனாக ஸ்டீவன் ஃபின் தெரிவுசெய்யப்பட்டார்.
5 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026