2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஜூனைட் கானுக்கு காயம்

A.P.Mathan   / 2015 ஜனவரி 21 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஜூனைட் கான், பயிற்சியின் போது காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

கடந்த 15ஆம் திகதி இவர் பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளையில் கீழே விழுந்தமையால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பிரதம தேர்வாளர் மொய்ன் கான் தெரிவித்துள்ளார். 

எனவே, நியூசிலாந்தில் ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 3ஆம் திகதிகளில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியில் ஜூனைட் கானுக்குப் பதிலாக பிலவல் பாற்றி இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக ஜூனைட் கான் காயங்களிலிருந்து குணமாகிடும் பட்சத்தில் அவர் அணிக்குள் உள்வாங்கப்படுவார் என்றும் அவ்வாறு அவர் பூரண உடல் தகுதியைப் பெறாதபட்சத்தில், தற்போது  அவருக்குப் பதிலாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ள பிலவல் பாற்றியின் அடுத்த சில போட்டிகளினான பெறுபேறுகளைப் பொறுத்து அவரையே அணிக்குள் வைத்துக்கொள்வதா அல்லது வேறு ஒரு வீரரைத் தெரிவுசெய்வதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .