2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

உலக்கக்கிண்ணத்தின் பின்னர் ஹடின் ஓய்வு?

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் உப தலைவரும் விக்கெட் காப்பாளருமான பிரட் ஹடின், தான் ஓய்வு பெறும் காலம் அண்மித்துள்ளதாக கூறியுள்ளார். உலகக்கிண்ண தொடரில் விளையாடிவரும் ஹடின், பிரிஸ்பேர்னில் வைத்து இந்தக் கருத்தை கூறியுள்ளார். 

37 வயதை பூர்த்தி செய்துள்ள பிரட் ஹடின், இதுவரை 119 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 3,027 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 2001ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இவர் அறிமுகத்தை மேற்கொண்டார். தான் இந்த உலகக் கிண்ணத்தை ரசித்து வருவதாகவும், இறுதிப் போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதனால் அங்கே நிறைவு செய்வது சிறப்பாக இருக்கும் என தான் கருதுவதாகவும் கூறியுள்ள பிரட் ஹடின், ஆனாலும் தான் விடை பெறுவது எப்போது என்ற தீர்க்கமான முடிவை எடுக்கவில்லை எனவும் இருப்பினும் மிக விரைவில் அந்த முடிவை எடுப்பேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .