2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து

George   / 2015 மார்ச் 21 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற உலகக்கிண்ண 4ஆவது காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி, 143 ஓட்டங்களால் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. 

வெலிங்டன் மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 393 ஓட்டங்களை குவித்தது.

394 என்ற வெற்றியிலக்கினை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி, 30.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .