2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஆசிய கிண்ணம் தொடரும்

Thipaan   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய அணிகள் பங்குபற்றி வரும் கிரிக்கெட் தொடர் எதிர்காலத்தில் நடைபெறாது என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில், ஆசியக் கிண்ணத்தை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை பொறுப்பேற்று நடத்தவுள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட் பேரவை  இன்னும் ஒரு பிராந்திய அல்லது உப கிரிக்கெட் சபை இருப்பதை விரும்பவில்லை.

எனவே, ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தை இல்லாமல் செய்யவேண்டும் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த அமைப்பை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை முழுமையாக தனது நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்துள்ளது.

அந்த அமைப்பில் கடமையாற்றிய பலர் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

இதன்படி 2016, 2018, 2020, 2022ஆம் ஆண்டுகளில் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் என சர்வதேசக் கிரிக்கெட் பேரவை உறுதி செய்துள்ளது.

ஆசிய நாடுகளில் உள்ள துணை அங்கத்துவ நாடுகள் இந்த தொடரில் எவ்வாறு பங்குபற்றுவது என பின்னர் முடிவு எடுக்கப்படவுள்ளது.

தெரிவுகாண் போட்டிகளின் அடிப்படையில் குறித்த சில அணிகள் இந்த தொடரில் பங்குபற்றும் என நம்பப்படுகின்றது.

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் போட்டித் தொடர்களுக்கு அடுத்தபடியாக உலகில் நடைபெறும் கூடிய அணிகள் பங்குபற்றும் தொடர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .