2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சம்பியன்ஸ் லீக் தொடர் இனி சந்தேகம்?

Thipaan   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் டுவெண்டி 20 தொடரை தொடர்ந்து நடத்துவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையும் சம்பியன்ஸ் லீக் தொடரின்  தொலைக்காட்சி உரிமையை கொண்டுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் இந்த தொடர் தொடர்ந்து நடைபெறுவதை விரும்பவில்லை.  

இந்த விடயம் தொடர்பாக ஐ.பி.எல் நிர்வாக கூட்டத்தில் பேசப்படவுள்ளது. சம்பியன் லீக் தொடரின் பிரதான இடத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கொண்டுள்ளது.

மற்றைய இணை நாடுகளான அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, நாடுகளுடன் பேசிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்த தொடரை முடிவுக்கு கொண்ட வர நினைப்பதன் காரணமாக இந்த தொடர் நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக நம்பப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு இந்த சம்பியன் லீக் தொடர் ஆரம்பித்தது முதல் பிரதான அனுசரணையாளர் கிடைக்கவில்லை.

அதேவேளை போதியளவு பார்வையாளர்கள் போட்டிகளை பார்வையிட வருகை தரவில்லை.

தொலைக்காட்சியிலும் போதியளவானவர்கள் போட்டியை பார்வையிடவில்லை. தொலைக்காட்சி தரப்படுத்தல்களிலும் முன்னேற்றம் இல்லை.

இவை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்த தொடரை நிறுத்த நினைப்பதற்கு முக்கிய காரணங்களாகும்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .