Thipaan / 2015 மே 16 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச ரீதியில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் 20-20 லீக் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர். ஷேன் வோர்ன் ஆகியோர் முக்கிய இடங்களைப் பெற்றுள்ளனர்.
இந்த தொடரில் முன்னணி வீரர்களான ரிக்கி பொன்டிங், கிளன் மக்ராத், பிரட் லீ, மைக்கல் வோன், அன்று பிளின்ட்ஒப் ஆகியோர் ஒப்பந்தம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் ஆரம்பிக்கவுள்ள இந்த தொடர் பிற நாடுகளிலும் தொடர்ந்து வரும் காலங்களில் நடைபெறவுள்ளது.
சர்வதேசக் கிரிக்கெட் பேரவை இந்த தொடர் தொடர்பாக அறியவில்லை எனக்கூறப்பட்டுள்ளது. பிரட் லீயின் முகாமையாளர் மூலமே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் ஷேன் வோர்ன் தனது டுவிட்டர் பக்கத்தில் தானும் சச்சினும் இணைந்து முக்கிய அறிவுப்பு ஒன்றை விரைவில் அறிவிப்போம் என பதிவு இட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago