2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சம்பியன் லீக் தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை

A.P.Mathan   / 2015 மே 17 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன் லீக் 20-20 தொடர் நிறுத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து குறித்த தொடரை நடாத்திவரும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா மற்றும் கிரிக்கெட் தென் ஆபிரிக்கா ஆகிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். 

ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்கு இரண்டு சபைகளினதும் தலைவர்களும், பிரதம நிறைவேற்று அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். அந்த நேரத்தில் குறித்த தொடர் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. போதியளவு பார்வையாளர்கள் இல்லை. தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விளம்பரதாரர்கள் போதியளவு கிடைப்பதில்லை போன்றனவற்றுடன் பிரதான அனுசரணையாளர் தொடர் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்னமும் கிடைக்கவில்லை. இந்த காரணங்களுக்காகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்த தொடரை நிறுத்த முனைப்புடன் இருக்கின்றது. சம்பியன் லீக் தொடர், ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஏனைய சபைகளுடன் இணைந்து ஆரம்பித்து இருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .