2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பாகிஸ்தானுக்கு சென்றது ஸிம்பாவே

A.P.Mathan   / 2015 மே 19 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் நாட்டிற்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு ஸிம்பாவே கிரிக்கெட் அணி இன்று (19) பாகிஸ்தானுக்கு சென்றடைந்தது. கடும் பாதுகாப்பு மத்தியில் ஸிம்பாவே அணி வரவேற்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலையடுத்து எந்த ஒரு கிரிக்கெட் அணியும் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் இழுபறிகளுக்கு பிறகு ஒருவாறாக பாகிஸ்தானை சென்றடைந்துள்ளது ஸிம்பாவே. 

இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகள் அடங்கிய 20-20 தொடர் 22ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. 3 போட்டிகள் அடங்கிய ஒருநாள் சர்வதேசப்போட்டித் தொடர் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .