Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 23 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆண்களுக்கான ஒலிம்பிக் ஐஸ் ஹொக்கி தங்கப் பதக்கத்தை 46 ஆண்டுகளில் முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்கா வென்றுள்ளது.
2026 குளிர்கால ஒலிம்பிக்கின் முடிவில் கனடாவை 2-1 என்ற ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (22) வென்றே தங்கப் பதக்கத்தை ஐ. அமெரிக்கா வென்றது. முன்னதாக 1980ஆம் ஆண்டு தங்கப் பதக்கத்தை அமெரிக்கா வென்றிருந்தது.
இப்போட்டியைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை உத்தியோகபூர்வ கணக்கானது எக்ஸில் கனேடிய வாத்தொன்றை ஐக்கிய அமெரிக்க தேசிய விலங்கான வழுக்கை பருந்து தாக்கும் புகைப்படத்தை டுவீட் செய்திருந்தது.
இம்முறை குளிர்கால ஒலிம்பிக்கில் 18 தங்கப் பதக்கங்கள், 12 வெள்ளிப் பதக்கங்கள், 11 வெண்கலப் பதக்கங்களுடன் நோர்வே பதக்கப் பட்டியலில் முதலாமிடத்தைப் பெற்றது. 12 தங்கப் பதக்கங்கள், 12 வெள்ளிப் பதக்கங்கள், 9 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாமிடத்தைப் பெற்றது. 10 தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்களுடன் நெதர்லாந்து மூன்றாமிடத்தைப் பெற்றது.
4 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
8 hours ago