Mayu / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 528 ஓட்டங்கள் முன்னிலையில் நியூசிலாந்து காணப்படுகின்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், மெளன்ட் மகட்டரேயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த இந்த டெஸ்டின் நேற்றைய மூன்றாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த தென்னாபிரிக்கா சகல விக்கெட்டுகளையும் 162 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் கீகன் பீற்றர்சன் 45, டேவிட் பெடிங்ஹாம் 32 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மிற்செல் சான்ட்னெர்,

மற் ஹென்றி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், றஷின் றவீந்திர, கைல் ஜேமிஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில் டரைல் மிற்செல் 11 ஓட்டங்களுடனும், டொம் பிளென்டெல் ஐந்து ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர்.
முன்னதாக 109 ஓட்டங்களுடன் கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்திருந்தார். பந்துவீச்சில் அணித்தலைவர் நீல் பிரான்ட் 2, டேன் பற்றர்சன், ருவான் டி ஸ்வார்ட் ஆகியோர் தலா ஒவ்வொருவிக்கெட்டைக் கைப்பற்றினர்.
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago