2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

ICC விருதுகளின் இறுதிப் பட்டியல்

A.P.Mathan   / 2014 நவம்பர் 06 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் விருதுகளுக்கான இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருதுகளில் மக்களால் தெரிவுசெய்யப்படும் மக்களின் விருப்ப தெரிவு விருதினை இந்திய அணியின் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் வெற்றி பெற்றுள்ளார். இலங்கை அணியின் அஞ்சலோ மத்தியூஸ், அவுஸ்திரேலியா அணியின் மிச்சல் ஜோன்சன், இங்கிலாந்து அணியின் தலைவி சார்லொட் எட்வேர்ட்ஸ் ஆகியோருடன் போட்டியிட்டு இந்த விருதைப் பெற்றுள்ளார். மக்களின் வாகுகளின் அடிப்படையில் இந்த விருது தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதுக்காக இலங்கை அணியின் குமார் சங்ககார மற்றும் அஞ்சலோ மத்தியூஸ், அவுஸ்திரேலியா அணியின் மிச்சல் ஜோன்சன், தென் ஆபிரிக்கா அணியின் AB DE வில்லியர்ஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 
 
சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுக்கு லங்கை அணியின் குமார் சங்ககார மற்றும் அஞ்சலோ மத்தியூஸ், அவுஸ்திரேலியா அணியின் மிச்சல் ஜோன்சன் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்துள்ள வீரர்கள். 
 
சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி வீரருக்கான விருதுக்கு இந்திய அணியின் விராத் கோலி, தென் ஆபிரிக்கா வீரர்களான AB DE வில்லியர்ஸ், குயின்டன் டி கொக், டேல் ஸ்டைன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 
 
சிறந்த அறிமுக வீரருக்கான விருதுக்கு இங்கிலாந்து வீரர்கள் கரி பலன்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும், நியுசிலாந்து வீரர்களான ஜிம்மி நீஷாம், கூறே அன்டர்சன் ஆகியோரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளா வீரர்கள் ஆவர். 
 
சிறந்த டுவென்டி டுவென்டி பெறுதிகளுக்கான விருதுக்கு இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் கேல்ஸ், அவுஸ்திரேலியா அணியின் ஆரோன் பிஞ்ச், இலங்கை அணியின் ரங்கன ஹேரத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 
 
சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இங்கிலாந்து அணியின் சார்லொட் எட்வேர்ட்ஸ் மற்றும் சாரா டெய்லொர், இந்தியா அணியின் மித்தாலி ராஜ், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஸ்டெபனி  டெய்லொர் ஆகியோர் போட்டி இடுகின்றனர். 
 
சிறந்த நடுவருக்காக சர்வதேசக் கிரிக்கெட் சபையின் குழுவில் உள்ள 12 பேரும் போட்டி இடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த இறுதிப் பட்டியலுடன் சர்வதேசக் கிரிக்கெட் சபையின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட் அணியில் அஞ்சலோ மத்தியூசின் தலைமையில் டேவிட் வோனர், கேன் வில்லியம்சன், குமார் சங்ககார, வில்லியர்ஸ், ஜோ ரூட், மிச்சல் ஜோன்சன், ஸ்டுவோர்ட் ப்ரோட், டேல் ஸ்டைன், ரங்கன ஹேரத், ரிம் சௌதீ ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். ரொஸ் ரெய்லர் 12ஆவது வீரராக இடம் பிடித்துள்ளார். 
 
ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் டோனியின் தலைமையின் கீழ் மொஹமட் ஹபீஸ், குயின்டன் டி கொக், விராத் கோலி, ஜோர்ஜ் பெய்லி, வில்லியர்ஸ், டுவைன் பிராவோ, ஜேம்ஸ் போல்க்னர், டேல் ஸ்டைன், மொஹமட் ஷமி, அஜந்த மென்டிஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ரோஹித் ஷர்மா 12ஆவது வீரராக அணியில் இடம் பிடித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .