Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 07 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், அத்லாண்டாவின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் லேஸியோ வென்றது.
லேஸியோ சார்பாக குஸ்டவ் இஸகென் பெற்றிருந்தார்.
இதேவேளை றோமாவின் மைதானத்தில் திங்கட்கிழமை (07) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் சமப்படுத்தியது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை மனுவல் லொகடெல்லி பெற்றதோடு, றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை எல்டர் ஷொமுரோடோவ் பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 68 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் காணப்படுகின்றது. 64 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நாபோலியும், 58 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும், 56 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் பொலொக்னாவும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட நாப்போலியும், பொலொக்னாவும் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
38 minute ago
2 hours ago
3 hours ago