Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளில் , ஐக்கிய அமெரிக்காவுக்கெதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி, முழுமையான ஆதிக்கம் செலுத்தப்பட்ட திறமையை வெளிப்படுத்தி, வெற்றிபெற்றது.
மறுபுறத்தில், விறுவிறுப்பாக இடம்பெற்ற ஜோர்ஜிய, நமீபிய அணிகளுக்கிடையிலான போட்டியில் ஜோர்ஜியா வெற்றிபெற்றது.
அமெரிக்காவுக்கெதிரான போட்டியில், ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணி, முதற்பாதி முடிவில் 14-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.
எனினும், இரண்டாவது பாதியில் முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணி, இரண்டாவது பாதியில் மாத்திரம் 50 புள்ளிகளைக் குவித்தது. இரண்டாவது பாதியிலும் எந்தவிதப் புள்ளிகளையும் விட்டுக் கொடுத்திருக்காத தென்னாபிரிக்க அணி, 64-0 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவான வெற்றியைப் பெற்றது.
இவ்வாண்டுக்கான தொடரில் பெறப்பட்ட மிகவும் ஒருதலைப்பட்சமான முடிவாக இப்போட்டி முடிவு அமைந்தது.
ஜோர்ஜிய, நமீபிய அணிகளுக்கிடையிலான போட்டி, இறுதி நிமிடம் வரை விறுவிறுப்பாக அமைந்தது.
இப்போட்டியின் முதலாவது பாதியில் நமீபிய அணி ஆதிக்கம் செலுத்தி, 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. எனினும், இரண்டாவது பாதியில் ஜோர்ஜிய அணி சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, அப்பாதியில் பெறப்பட்ட முதல் 17 புள்ளிகளையும் பெற்றது.இதன்படி, 17-6 என்ற புள்ளிகள் கணக்கில் ஜோர்ஜியா முன்னிலை வகித்தது.
தனது போட்டித் தன்மையைக் கைவிடாத நமீபிய அணி, தொடர்ச்சியாகப் போராடி, அடுத்த 8 புள்ளிகளையும் விரைவாகப் பெற்று, 16-17 என்ற நிலைக்கு வந்தது. எனினும், வெற்றிக்குத் தேவையான புள்ளிகளை அவ்வணியால் பெற்றுக் கொள்ள முடியாது போக, 17-16 என்ற புள்ளிகள் கணக்கில் ஜோர்ஜிய அணி வெற்றிபெற்றது.
5 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026