2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

அயர்லாந்தை இலகுவாக வென்றது தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கிடையே பெனோயில் இடம்பெற்ற ஒற்றை ஒருநாள் சர்வதேசப் போட்டியில், தென்னாபிரிக்க அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணியின் தலைவர் வில்லியம் போர்ட்பீல்ட், தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 354 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், தென்னாபிரிக்க அணி சார்பாக, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், தனது அறிமுகத்தை மேற்கொண்ட டெம்பா பவுமா 113(123), குயின்டன் டி கொக் 82(66), ஜெ.பி.டுமினி ஆட்டமிழக்காமல் 52(43), பர்ஹான் பெகாத்திரின் 50(22) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அயர்லாந்து அணி சார்பாக, கிரேய்க் யங் மூன்று, கெவின் ஓ பிரயன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 355 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 30.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 206 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அயர்லாந்து அணி சார்பாக, கெவின் ஓ பிரயன் 41(36), போல் ஸ்டேர்லிங் 40(49) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணி சார்பாக, ஜெ.பி.டுமினி நான்கு, ஆரோன் பன்கிஸோ, வெய்ன் பார்னல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக டெம்பா பவுமா தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .