2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அயர்லாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இந்தியா

Shanmugan Murugavel   / 2022 ஜூன் 29 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த இந்தியா, டப்ளினில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 225/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தீபக் ஹூடா 104 (57), சஞ்சு சாம்ஸன் 77 (42), சூரியகுமார் யாதவ் 15 (05), ஹர்டிக் பாண்டியா ஆ.இ 13 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்க் அடைர் 3/42 [4], கிறேய்க் யங்க் 2/35 [4], ஜொஷ் லிட்டில் 2/38 [4])

அயர்லாந்து: 221/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்டி போல்பிரயன் 60 (37), போல் ஸ்டேர்லிங்க் 40 (18), ஹரி டெக்டர் 39 (28), ஜோர்ஜ் டோக்ரல் ஆ.இ 34 (16), மார்க் அடைர் ஆ.இ 23 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 0/12 [2], ரவி பிஷ்னோய் 1/41 [4], உம்ரான் மலிக் 1/42 [4])

போட்டியின் நாயகன்: தீபக் ஹூடா

தொடரின் நாயகன்: தீபக் ஹூடா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .