Shanmugan Murugavel / 2016 நவம்பர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்லரென் போர்மியுலா வண் அணியின் புதிய முகாமையாளரான ஜொஸ்ட் கப்பிட்டோ, 2017ஆம் ஆண்டுக்குப் பின்னரும் ஸ்பானிய ஓட்டுநரான பெர்ணான்டோ அலோன்ஸோவை அணியில் தக்க வைத்திருப்பது தொடர்பில் உறுதி பூண்டுள்ளார்.
இரண்டு தடவைகள் போர்மியுலா வண் சம்பியனான 35 வயதான அலோன்ஸோ, அடுத்த பருவகால இறுதி வரையிலேயே மக்லரென் அணியுடன் ஒப்பந்தத்தில் இருக்கின்றார். எவ்வாறெனினும், தனது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு முன்னர், புதிய 2017ஆம் ஆண்டு கார்கள் எவ்வாறு தொழிற்படுகின்றன என பார்க்க விரும்புவதாக அலோன்ஸோ தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, கருத்துத் தெரிவித்த கப்பிட்டோ, காரும், இயந்திரமும் நன்றாக இருந்தால், மக்கலரென் அணியிலேயே அலோன்ஸோ நீடிக்காமல் விடுவதற்கு ஒரு காரணமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago