Shanmugan Murugavel / 2016 நவம்பர் 23 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான சப்பல் - ஹட்லி தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர், டிசெம்பர் 4ஆம் திகதி ஆரம்பித்து, 6ஆம், 9ஆம் திகதிகளில் அடுத்த 2 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
14 பேர் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில், வேகப்பந்து வீச்சாளர் பற் கமின்ஸ், சகலதுறை வீரர்களான கிளென் மக்ஸ்வெல், ஜேம்ஸ் ஃபோக்னர் ஆகியோர் மீள அழைக்கப்பட்டுள்ளனர். இதில் பற் கமின்ஸ், தனது உபாதைகளிலிருந்து குணமடைந்து, 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்குப் பின்னர் அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
புதுமுக வீரராக, வேகப்பந்து வீசும் சகலதுறை வீரரான ஹில்ட்டன் கார்ட்ரைட் சேர்க்கப்பட்டுள்ளார்.
குழாம்: டேவிட் வோணர், ஆரொன் ஃபின்ச், ஸ்டீவன் ஸ்மித், ஜோர்ஜ் பெய்லி, ட்ரவிஸ் ஹெட், கிளென் மக்ஸ்வெல், மிற்சல் மார்ஷ், ஹில்ட்டன் கார்ட்ரைட், மத்தியூ வேட், ஜேம்ஸ் ஃபோக்னர், மிற்சல் ஸ்டார்க், பற் கமின்ஸ், ஜொஷ் ஹேஸல்வூட், அடம் ஸாம்பா.
10 minute ago
42 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
42 minute ago
50 minute ago