Shanmugan Murugavel / 2022 ஜனவரி 30 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் முதல்நிலை வீராங்கனையான அஷ்லெய் பார்டி சம்பியனாகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் டானியல் கொலின்ஸை எதிர்கொண்ட அவுஸ்திரேலியாவின் பார்டி 6-3, 7-6 (7-2) என்ற நேர் செட்களில் வென்றே சம்பியனாகியிருந்தார்.
தனது அரையிறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் மடிஸன் கீஸை 6-1, 6-3 என்ற நேர் செட்களில் பார்டி வென்றும், கொலின்ஸின் அரையிறுதிப் போட்டியில் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வென்றுமே இறுதிப் போட்டிக்கு இருவரும் தகுதி பெற்றிருந்தனர்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026