2025 மே 19, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கு ஈடு கொடுக்குமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 08 , மு.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது காலியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை படுதோல்வியைச் சந்தித்த நிலையில் தொடரைச் சமப்படுத்துவதற்கு மேம்பட்ட துடுப்பாட்டப் பெறுபேறுகளைக் காண்பிக்க வேண்டியுள்ளது.

பிரவீன் ஜெயவிக்கிரமவுக்கு மேலதிகமாக தனஞ்சய டி சில்வா, அசித பெர்ணாண்டோ, ஜெஃப்ரி வன்டர்சேயும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் டுனித் வெல்லலாகே, மகேஷ் தீக்‌ஷன ஆகியோர் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதுடன், கசுன் ராஜிதவும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் மாற்றமெதுவும் இருக்காது என நம்பப்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் சிரேஷ்ட வீரர்களான அணித்தலைவர் திமுக் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் மற்றும் குசல் மென்டிஸிடமிருந்து நீண்ட இனிங்ஸ்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதேவேளை, இலங்கைக் குழாமில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்ளாத பிரபாத் ஜெயசூரிய மற்றும் லக்‌ஷன் சந்தகான் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X