Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜூன் 08 , பி.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை இழந்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்றிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் தோற்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி இருக்கையிலேயே தொடரை இலங்கை பறிகொடுத்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஆரோன் பின்ஞ், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, ஆரம்பத்திலேயே தனுஷ்க குணதிலக, பதும் நிஸங்கவை கிளென் மக்ஸ்வெல், ஜஹை றிச்சர்ட்ஸனிடம் இழந்தது.
பின்னர் சரித் அஸலங்கவின் 39 (33), குசல் மென்டிஸின் 36 (36) ஓட்டங்கள் மூலம் இனிங்ஸ் நகர்ந்தபோதும் இவர்கள் இருவரும் குறிப்பிட்ட இடைவெளியில் மக்ஸ்வெல், ஜஹை றிச்சர்ட்ஸனிடம் வீழ்ந்ததோடு, அடுத்து வந்த பானுக ராஜபக்ஷவும் சிறிது நேரத்தில் கேன் றிச்சர்ட்ஸனிடம் வீழ்ந்தார். தொடர்ந்து வனிடு ஹஸரங்க, அணித்தலைவர் தசுன் ஷானக, துஷ்மந்த சமீர, சாமிக கருணாரத்ன ஆகியோர் அடுத்தடுத்து ஜஹை றிச்சர்ட்ஸன், கேன் றிச்சர்ட்ஸனிடம் (3) வீழ்ந்த நிலையில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களையே இலங்கை பெற்றது.
பந்துவீச்சில், கேன் றிச்சர்ட்ஸன் 4-0-30-4, ஜஹை றிச்சர்ட்ஸன் 4-0-26-3, கிளென் மக்ஸ்வெல் 3-0-18-2, ஜொஷ் ஹேசில்வூட் 4-1-16-0, அஸ்தன் அகர் 4-0-27-0, மிற்செல் மார்ஷ் 1-0-7-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 125 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, பின்ஞ்சின் 24 (13) ஓட்டங்கள் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்றது. எனினும் அவரும், அடுத்து வந்த மிற்செல் மார்ஷும் சிறிது இடைவெளியில் ஹஸரங்கவிடம் வீழ்ந்தனர். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் உடனேயே நுவான் துஷாரவிடம் வீழ்ந்ததோடு, சிறிது நேரத்தில் டேவிட் வோர்னரும் 21 (10) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் துஷ்மந்த சமீரவிடன் வீழ்ந்ததோடு, தொடர்ந்து ஹஸரங்கவிடம் ஒரே ஓவரில் மக்ஸ்வெல்லும், அகரும் வீழ்ந்தனர்.
எவ்வாறெனினும், மத்தியூ வேட்டின் ஆட்டமிழக்காத 26 (26), ஜஹை றிச்சர்ட்ஸனின் இணைப்பாட்டத்தால் 17.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் அவுஸ்திரேலியா வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், அஸலங்க 3-0-7-0 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக வேட் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
3 hours ago