Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 25 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளுக்குமான குழாமில், இந்தியாவின் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களுக்கான இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா இருவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்த இவர்கள் இருவருக்கும், முதல் 3 போட்டிகளிலும் ஓய்வு வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த ஓய்வு தொடரவுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமிக்கும் வழங்கப்பட்ட ஓய்வு தொடரவுள்ளது.
முதல் 3 போட்டிகளுக்குமான குழாமில் சேர்க்கப்பட்டு, காய்ச்சல் காரணமாக அப்போட்டிகளில் விளையாட முடியாது போன சுரேஷ் ரெய்னா, இக்குழாமில் சேர்க்கப்படவில்லை.
இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிப்பதோடு, அடுத்த போட்டி, நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழாம்: மகேந்திரசிங் டோணி, றோகித் ஷர்மா, அஜின்கியா ரஹானே, விராத் கோலி, மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்டியா, அக்ஸர் பட்டேல், ஜயந்த் யாதவ், அமித் மிஷ்ரா, ஜஸ்பிறிட் பும்ரா, தவால் குல்கர்ணி, உமேஷ் யாதவ், மந்தீப் சிங், கேதார் யாதவ்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago