Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டியின் 4ஆவது நாளிலேயே அப்போட்டியை வென்ற இந்திய அணி, அத்தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, வெள்ளையடித்துள்ளது.
இன்றைய 4ஆம் நாளில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி, 475 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நியூசிலாந்துக்கு வழங்கிய அவ்வணி, 153 ஓட்டங்களுக்கு நியூசிலாந்தை வீழ்த்தி, 321 ஓட்டங்களால் வென்றது.போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும், இரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவானார். இது, அவரது 7ஆவது தொடரின் நாயகன் விருதாகும்.
ஸ்கோர் விவரம்:இந்தியா: 557/5 (விராத் கோலி 211, அஜின்கியா ரஹானே 188, றோகித் ஷர்மா (ஆ.இ) 51). பந்துவீச்சு: ட்ரென்ட் போல்ட் 2, ஜீதன் பட்டேல் 2 விக்.)நியூசிலாந்து: 299/10 (மார்ட்டின் கப்டில் 72, ஜேம்ஸ் நீஷம் 71, டொம் லேதம் 53. பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 6, இரவீந்திர ஜடேஜா 2 விக்.)இந்தியா: 216/3 (செற்றேஸ்வர் புஜாரா (ஆ.இ) 101, கௌதம் கம்பீர் 50. பந்துவீச்சு: ஜீதன் பட்டேல் 2 விக்.)நியூசிலாந்து: 153/10 (றொஸ் டெய்லர் 32. பந்துவீச்சு: அஷ்வின் 7, ஜடேஜா 2 விக்.)
இப்போட்டி முடிவில், டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தைக் கைப்பற்றிய இந்திய அணிக்கான டெஸ்ட் வெற்றிக் கோல், இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கரால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .