2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

அஸார் அலி 302*; பாகிஸ்தான் 579/3

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெற்று வருகிறது.

இதில், டுபாயில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அந்தவகையில், பாகிஸ்தான் அணி, இன்னும் 510 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

தற்போது களத்தில், கிரேய்க் பிறாத்வெயிட் 32, டரன் பிராவோ 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டினை, யசீர் ஷா வீழ்த்தியிருந்தார்.

முன்னதாக, மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 579 ஓட்டங்களை குவித்த பாகிஸ்தான் அணி, தமது முதலாவது இனிங்ஸை இடைநிறுத்தியிருந்தது. அஸார் அலி ஆட்டமிழக்காமல் 302, சமி அஸ்லாம் 90, பாபர் அஸாம் 69, அசாட் ஷஃபிக் 67 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சுக், தேவேந்திர பிஷூ இரண்டு, றொஸ்டன் சேஸ் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .