Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 05 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கும் இலங்கை ஏ அணிக்குமிடையிலான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாம் நாள் முடிவில், இலங்கை ஏ அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
விக்கெட் இழப்பின்றி ஓட்டமெதனையும் பெறாத நிலையில் இன்றைய இரண்டாவது நாளைத் தொடர்ந்த இலங்கை ஏ அணி, இன்றைய நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 348 ஓட்டங்களைப் பெற்றது.
முதலாவது விக்கெட்டுக்காக திமுத் கருணாரட்ணவும் குசால் பெரேராவும் 167 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால், அதன் பின்னர் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக இழக்கப்பட்டு, 4 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால், 5ஆவது விக்கெட்டுக்காக கருணாரட்ணவும் டிக்வெல்லவும் 85 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
மீண்டும் விக்கெட்டுகளை இழந்த இலங்கை ஏ, அடுத்த 3 விக்கெட்டுகளையும் 20 ஓட்டங்களுக்கு இழந்தது.
துடுப்பாட்டத்தில் கருணாரட்ண 132, குசால் பெரேரா 87, நிரோஷன் டிக்வெல்ல 59 ஓட்டங்களைப் பெற்றனர். எதிர்பார்ப்புடன் களமிறங்கிய லஹிரு திரிமான்ன, 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளரான றஹீம் கோர்வோல் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணி, 276 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
51 minute ago