Shanmugan Murugavel / 2017 ஜனவரி 02 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று (01) இடம்பெற்ற போட்டிகளில், ஆர்சனல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
ஆர்சனல், 2-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பலஸைத் தோற்கடித்துள்ளது. அலெக்ஸிஸ் சந்தேஸிடமிருந்து, தனது பின்பக்கமாக பந்தைப் பெற்ற ஒலிவர் ஜிரோட், தனது இடதுகாலை நீட்டி பந்தைப் பெற்று, பந்தை தலைக்கு மேலால் எடுத்து போட்டியின் 17ஆவது நிமிடத்தில் அபாரமாக கோலைப் பெற்று ஆர்சனலுக்கு முன்னிலையை வழங்கினார். பின்னர், போட்டியின் இரண்டாவது பாதியின் 56ஆவது நிமிடத்தில் அலெக்ஸ் இவோபி பெற்ற கோலுடன் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 40 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆர்சனல், தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆர்சனலை விட மூன்று புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ள லிவர்பூல் இரண்டாமிடத்தில் காணப்படுவதுடன், ஆர்சனலை விட ஒன்பது புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ள செல்சி, முதலாமிடத்தில் உள்ளது.
டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 4-1 என்ற கோல் கணக்கில் வட்போர்ட்டைத் தோற்கடித்தது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணி சார்பாக, ஹரி கேன், டெலே அல்லி ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றனர். இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், இங்கிலாந்து பிறீமியர் லீக் தரவரிசையில் 39 புள்ளிகளைப் பெற்றுள்ள டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், கடந்த ஒக்டோபர் மாதத்துக்குப் பிறகு, முதற்தடவையாக இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறியுள்ளது. மன்செஸ்டர் சிற்றியும் 39 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கை அடிப்படையில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் நான்காமிடத்தில் உள்ளது.
21 minute ago
24 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
1 hours ago
1 hours ago