Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 08 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வாண்டுக்கான பராஒலிம்பிக் போட்டிகள், பிரேஸில் நேரப்படி நேற்று இரவு இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வுடன் ஆரம்பித்தன. வண்ணமயமான நடனங்கள், சக்கரக்கதிரையில் அணிவகுப்பு, மிகப்பெரிய பலூன்கள் என, கவர்ச்சிகரமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
பிரேஸில் ஜனாதிபதி மைக்கல் தெமர், "விளையாட்டுகள் ஆரம்பித்தன என்று இத்தால் பிரகடனப்படுத்துகிறேன்" எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இப்போட்டிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தன.
சக்கரக்கதிரைகளில் காணப்பட்ட விளையாட்டு வீரர்கள், உயரத்திலிருந்து குதித்து மேற்கொண்ட சாகசங்கள், அங்கிருப்போரை மெய்சிலிர்க்க வைத்தன. வண்ணமயமான இந்த ஆரம்பத்துக்கு மத்தியிலும், இந்த ஆரம்ப நிகழ்வில், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் தோமஸ் பச் கலந்துகொள்ளாமை, சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
மேற்கு ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி வோல்ட்டர் ஸ்கீலின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காகவே அவரால் பங்குகொள்ள முடியவில்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால், பராஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவைத் தடை செய்தமையால், சம்மேளனத்துக்குள் காணப்படும் பிரிவுகளே அவரது வருகையின்மைக்குக் காரணமென, ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். மறுபக்கமாக, ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, பிரேஸில் பொலிஸாரால் அவர் தேடப்படுவதாகவும், அதன் காரணமாக அவர் வரவில்லை எனவும், சிலர் தெரிவிக்கின்றனர்.
இப்போட்டிகள், 18ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதோடு, 22 விளையாட்டுகளில் 528 வகையான விளையாட்டுகளில், 161 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,300 பேர் பங்குபற்றுகின்றனர்.
கடந்தமுறை இலண்டனில் இடம்பெற்ற போட்டிகளில், 95 தங்கப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 231 பதக்கங்களைப் பெற்ற சீன அணி முதலிடம் பெற்றது. இரண்டாமிடம் பெற்ற ரஷ்ய அணி, இம்முறை இத்தொடரில் பங்குபற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாமிடத்தை, பெரிய பிரித்தானிய அணி பெற்றிருந்தது.
43 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
52 minute ago
1 hours ago