Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆர்சனலுடனான போட்டியில் மன்செஸ்டர் யுனைட்ட்டெட் வென்றது.
இப்போட்டியின் 16ஆவது நிமிடத்தில், அலெக்ஸிஸ் சந்தேஸ் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி வர அதை போல் பொக்பா கோலாக்க மன்செஸ்டர் யுனைட்டெட் முன்னிலை பெற்றது. பின்னர், போட்டியின் 51ஆவது நிமிடத்தில் ஹென்றிக் மிகித்தரயான் பெற்ற கோலோடு கோல் எண்ணிக்கையை ஆர்சனல் சமப்படுத்தியது.
எவ்வாறெனினும், போட்டியின் இறுதி நிமிடங்களில், ஆஷ்லி யங்கின் உதையை மாற்று வீரராகக் களமிறங்கிய மெளரான பெலைனி தலையால் முட்டிக் கோலாக்க, 2-1 என்ற கோல் கணக்கில் இறுதியில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.
இதேவேளை, வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் பிறீமியர் லீக்கின் சம்பியன்களாக தம்மை உறுதிப்படுத்திக் கொண்ட மன்செஸ்டர் சிற்றி வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, லெரோய் சனே, கப்ரியல் ஜெஸூஸ், பெர்ணான்டின்ஹோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது. வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஆரோன் கிறஸ்வெல் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
1 hours ago
1 hours ago