2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆறாமிடத்துக்கு முன்னேறிய றபாடா

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 06 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஆறாமிடத்துக்கு தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ றபாடா முன்னேறியுள்ளார்.

இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய றபாடா, ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தை அடைந்துள்ளார்.

இதேவேளை, இப்போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, 12ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பற் கமின்ஸ், 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. ஷகீன் ஷா அஃப்ரிடி, 4. டிம் செளதி, 5. ஜேம்ஸ் அன்டர்சன், 6. ககிஸோ றபாடா, 7. ஜொஷ் ஹேசில்வூட், 8. நீல் வக்னர், 9. ஜஸ்பிரிட் பும்ரா, 10. மிற்செல் ஸ்டார்க்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. மர்னுஸ் லபுஷைன், 2. ஜோ றூட், 3. கேன் வில்லியம்ஸன், 4. ஸ்டீவ் ஸ்மித், 5. றோஹித் ஷர்மா, 6. டேவிட் வோணர், 7. திமுத் கருணாரத்ன, 8. பாபர் அஸாம், 9. விராட் கோலி, 10. ட்ரெவிஸ் ஹெட்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜேஸன் ஹோல்டர், 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. இரவீந்திர ஜடேஜா, 4. ஷகிப் அல் ஹஸன், 5. மிற்செல் ஸ்டார்க்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .